தெருநாய்கள் தொல்லை

Update: 2026-09-20 13:39 GMT

கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் மழைநீர் வடிகால், குடிநீர், சாலை என வெவ்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், அனைத்து வார்டுகளிலும் உள்ள முக்கிய பிரச்சினை தெருநாய்கள் தொல்லையாக இருந்து வருகிறது. ஆங்காங்கே தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் சாலையில் வாகனங்களில் செல்வோரை துரத்துவது, தெருவில் விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர், சிறுமிகளை துரத்துவது என இவற்றின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே செல்கிறது. சில நேரங்களில் துரத்தி கடித்தும் விடுகின்றன. நாய் துரத்துவதை கண்டு வாகனத்தில் வேகமாக சென்று விபத்தில் சிக்குவோரும் உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்