மதுரை வார்டு எண் 85 மண்டலம் எண் 4 தெற்கு வாசல், தெற்கு வெளி வீதி சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.