அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் - அரியலூர் சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பிரிங்கியம் கிராமம் சந்திப்பு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்க்காக திறந்தவெளியில் காத்திருந்து கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அந்த சந்திப்பு இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.