மதுரை மாநகராட்சி வார்டு எண் 70 துரைசாமி நகர், வேல்முருகன் நகர் மற்றும் வண்ணமாமலை பகுதிகளின் பிரதான நுழைவுப்பாதை பகுதியில் மழைநீர் வடிகால் வசதி போதிய அளவில் இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் கனமழையால் தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலையில் தேங்கிய மழை நீரில் மறைந்துள்ள பள்ளங்களில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?