மதுரை செக்கானூரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் காலை வேளையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை துரத்தி சென்று நாய்கள் கடிக்கின்றன. எனவே சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.