பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், காளியம்மன் கோவில் தெரு, தர்மபுரி-சேலம் மெயின் ரோடு உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சாலைகளில் திரியும் தெருநாய்களால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால், கீழே விழுந்து காயம் அடைகின்றனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?