பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குதிரைவட்டம் பகுதியில் சாலையோரத்தில் ராட்சத மரங்கள் வானுயர வளர்ந்து நிற்கின்றன. இதில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில் காணப்படுகின்றன. இதற்கிடையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்போது மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அதிகாரிகள் வெட்டி அகற்ற வேண்டும்.