சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி சென்று கடிப்பதால் அச்சத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.