ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 40-வது வார்டு பகுதியில் கோட்டையார் வீதி -1, 3 மோசிகீரனார் வீதி -1, கிருஷ்ணமூர்த்தி தோட்டம் -1, கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள சாலைகளில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த சாலைகளில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.