ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2026-07-12 18:03 GMT

திருக்கோவிலூர் நகரப்பகுதிகளில் சாலையோர பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையின் இருபுறத்திலும் உள்ள இடமானது சுருங்கிப்போய் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்