உத்தமபாளையம் கோட்டைமேடுத்தெரு வளைவு மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடைகள் சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழா தேரோட்டத்தின் போது அகற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. எனவே மீண்டும் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.