ஆலங்குளம் அருகே மேல குத்தபாஞ்சான் வடக்கு தெருவில் மின்கம்பத்தில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்பெட்டியை பூட்டி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.