டாஸ்மாக் கடையால் மக்கள் அவதி

Update: 2026-06-28 17:07 GMT

குமாரபாளையம்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பள்ளிபாளையம் பிரிவில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே தனியார் மருத்துவமனைகள், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. தனியார் மருத்துவமனை மற்றும் கடைகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்கள் மதுபிரியர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்