நாமகிரிப்பேட்டையில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், சமூக நல விடுதி என அனைத்தும் அருகருகே இயங்கி வருகின்றன. பள்ளிகளில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர் மேலும், சமூக நல விடுதியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி உள்ளனர். இந்த நிலையில், சமூக நல விடுதியின் வெளிப்புற சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.