தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-28 16:56 GMT

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளப்பிள்ளையார் கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது சாலையில் நடந்து செல்லும் மக்களை துரத்தி துரத்தி தெருநாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்