கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா நொய்யல் அருகே சேமங்கியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், அங்குள்ள சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. புதிய கோவில் கட்டுமானப் பணியின் போது நன்கொடை வசூலித்து சுற்றுச்சுவர் கட்டுவதாகக் கூறிய நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்பவில்லை. மேலும், கோவிலுக்குரிய புதிய தேரினையும் விரைந்து செய்து தர வேண்டும் என கிராம மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே, கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, புதிய தேரினையும் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.