அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரந்தரத் தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது பொறுப்புத் தலைமை ஆசிரியர் மூலமாகவே பள்ளி செயல்பட்டு வருவதால், மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பள்ளிக்கு நிரந்தரத் தலைமை ஆசிரியரை பணி நியமனம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.