ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.