கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, சர்ச் கார்னர் மற்றும் லைட்ஹவுஸ் கார்னர் ஆகிய முக்கியப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள முக்கியச் சந்திப்புகள் மற்றும் தெருக்களில் கூட்டமாகத் திரியும் இந்த நாய்கள், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளைத் துரத்துவதோடு, நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களையும் கடிக்கப் பாய்கின்றன. இதனால், பொதுமக்கள் தினமும் அச்சத்துடனேயே நடமாடும் அவல நிலை நீடிக்கிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.