கால்வாயை தூர்வார கோரிக்கை

Update: 2026-06-14 15:53 GMT

கரூர் மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் தொடங்கி நடையனூர் வழியாகக் கோம்புபாளையம் புகளூர் வாய்க்காலில் கலக்கும் உபரிநீர் கால்வாய், தற்போது செடி, கொடிகள் மற்றும் ஆள் உயரச் சம்புப் புற்கள் மண்டி முற்றிலும் மூடிக்கிடக்கிறது. குறிப்பாக, நடையனூர் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கு பின்புறம் உள்ள கால்வாய்ப் பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் சீராகச் செல்ல முடியாமல் அருகிலுள்ள வீடுகளுக்குள் புகும் நிலையும் நீடிக்கிறது. எனவே, மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்