விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-06-14 15:51 GMT

கரூர் - நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் தவுட்டுப்பாளையம்-பரமத்தி வேலூர் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 75 ஆண்டுகள் பழமையான பாலத்தில், நெடுகிலும் சுமார் 14 இடங்களில் ஆபத்தான முறையில் பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே அதிகாரிகள் சாக்குகளைக் கொண்டு தற்காலிகமாக மூடி தார் பூசிய நிலையில், அவை மீண்டும் பெயர்ந்து குழிகள் மேலும் அகலமாகி மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளன. இதனால் இப்பாலத்தின் வழியே செல்லும் பஸ்கள், கனரக வாகனங்களின் டயர்கள் வெடித்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ஆபத்தான குழிகளை நிரந்தரமாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்