அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. கூட்டமாகத் திரியும் இந்த நாய்கள், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களைத் துரத்திக் கடித்துக் குதறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரவும், தெருக்களில் அச்சமின்றி நடமாடவும் முடியாத சூழ்நிலை நீடிக்கிறது. எனவே, தெருநாய்களைப் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.