பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகத்திற்கு இதுவரை சொந்தக் கட்டிடம் கட்டப்படவில்லை. தற்சமயம் போதிய இடவசதி இல்லாத ராஜீவ் காந்தி சேவா மையக் கட்டிடத்தில் இயங்குவதால், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் புத்தகங்களை அமர்ந்து படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, இந்த நூலகத்திற்குச் சொந்தக் கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.