பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி வெள்ளாற்றில் கலக்கும் சின்னாறு, தற்போது சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. பல கிராமங்களின் குடிநீர் தேவையையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பூர்த்தி செய்யும் இந்த ஆற்றை முறையாகப் பராமரிக்காததால், நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதால் ஆறு மாசடைந்துள்ளது. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், குப்பை கொட்டுவதைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.