சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தெருநாய்கள் தொல்லை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரிவதுடன், வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து செல்கிறது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.