வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2026-05-24 09:47 GMT

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் இருந்து பிரிந்து பி.ஏ.பி. கிளை வாய்க்கால் முத்தணம்பாளையம் வழியாக செல்கிறது. இந்த கால்வாய் கடந்த சில மாதங்களாக தூர்வாரப்படாமல் குப்பைகள் குவிந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் கால்வாயை மறிந்து மண் கொட்டி பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும்போது முறையாக செல்ல முடிவதில்லை. எனவே வாய்க்காலை முறையாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்பிரமணியன், திருப்பூர்.

மேலும் செய்திகள்