தொல்லை தரும் நாய்கள்

Update: 2026-05-17 13:57 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதி சாலைகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். தெருநாய்கள் இரவு நேரங்களில் சாலையில் ஆங்காங்கே படுத்து தூங்குவதால், இருச்சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்