ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பது வழக்கம். இவர்களை தவிர ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பகல் நேரத்தில் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. பயணிகள், மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது வெயிலில் கடுமையாக பாதிக்கின்றனர். அவர்கள் நிற்பதற்கு என்று நிழற்கூடம் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிழற்கூடங்கள் அமைக்கலாமே!