குரங்குகள் தொல்லை

Update: 2026-02-22 15:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் மடத்துக்கடைவீதி, பழைய ஆதனக்கோட்டை, திருவள்ளுவர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை சில நேரங்களில் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் செல்கின்றன. மேலும் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதுடன், விவசாய நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்