பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2026-01-11 11:22 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அறந்தாங்கி கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் கரம்பக்காடு பிரிவு சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை பகுதியில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதுடன், நிழற்குடையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே நிழற்குடையை சுற்றியுள்ள செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்