பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் துங்கபுரம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகும் நிலை உள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.