பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி தூர்ந்து போன நிலையில் செடி, கொடிகள், கருவேல மரங்கள் முளைத்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மழை பெய்யும் போது மழைநீரை முழுமையாக இந்த பெரிய ஏரியில் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கொளக்காநத்தம் பெரிய ஏரியை தூர்வாரி மழைக்காலங்களில் தண்ணீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.