கொசுத்தொல்லை

Update: 2025-11-23 10:10 GMT

புதுக்கோட்டை டவுன் மீன் மார்க்கெட் அருகில் தெற்கு 3-ம் வீதி மற்றும் மேல 3-ம் வீதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்