பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அங்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள், தொழிலாளர்கள் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக சங்கு ஊதும் முறையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. சங்கு ஊதும் கோபுரம் பள்ளிகொண்டா கட்டுபுடி ரோட்டில் இருந்தது. நாளடைவில் சங்கு ஊதும் நடைமுறையை குறைத்து, ரத்து செய்து விட்டார்கள். பள்ளிகொண்டாவில் சங்கு ஊதும் நடைமுறையை மீண்டும் தொடங்குவார்களா?
-வைத்தியநாதன், பள்ளிகொண்டா.