நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சம்பகுளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை அப்பகுதி மக்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் முழுவதும் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. பருவமழை பெய்யும்போது குளத்தில் தண்ணீரை தேங்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.