வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-02-01 15:51 GMT

ஈரோடு ராசாம்பாளையம் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் பாதாள சாக்கடையில் இருந்து சுமார் 1½ அடிக்கு மேல் உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள், பஸ்கள் சிரமப்பட்டு செல்கின்றன. இதேபோல் தென்றல் நகர், இடையன்காட்டுவலசு பழைய பிரபா திரையரங்கம் சாலையில் என பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்