பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் பஸ்கள் நிற்க இடையூறாக உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.