பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் அரசு டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அனைத்து நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மதுப்பிரியர்கள் காலை நேரங்களிலேயே மது அருந்திவிட்டு பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோத மதுவிற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.