பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மூலம் விவசாயிகள் மக்காச்சோளத்திற்கு மருந்து தெளித்து வருகின்றனர். இந்நிலையில் டிரோன் ஆபரேட்டர்கள் விவசாயிகளிடம் ஏக்கருக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் முறையாக அனுமதி பெற்று, பயிற்சி பெற்றவர்கள் தான் டிரோனை இயக்குகிறார்களா? என விவசாயிகளிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உறுதி செய்வதுடன், கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.