ஈரோடு முனிசிபல் காலனி பவளம் வீதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில், படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்ெகாள்கிறோம்.