பெரம்பலூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இது அளவில் மிகவும் பெரிதாக உள்ளதால் தூய்மைக் காவலர்கள் பயன்படுத்த முடியாமல் அவதியடைவதுடன், குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். எனவே பயன்பாட்டில் இல்லாத குப்பைத் தொட்டியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவும், தூய்மைக் காவலர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய குப்பைத் தொட்டி வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.