மேற்கூரை சீரமைக்கப்படுமா?

Update: 2025-10-26 17:04 GMT

தர்மபுாி மாவட்டம் அரூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக சி.டி. ஸ்கேன் மையம் பூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் மருத்துவமனையின் மேற்கூரையை தண்ணீர் புகாத வகையில் சீரமைத்து தர வேண்டும் என்பதே நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.

-பாஸ்கர், தர்மபுரி.

மேலும் செய்திகள்