ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன. நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.