மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2025-10-05 13:30 GMT

அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை ரூ.10-க்கு திரும்பப்பெறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் சிலர் காலி மதுபாட்டில்களை சாலையிலும், சாலை ஓரத்திலும் வீசி உடைத்து செல்கின்றனர். இவை அவ்வழியாக செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி பதம் பார்கிறது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்