பார்வதிபுரத்தில் இருந்து ராணிதோட்டம் செல்லும் கால்வாய்க்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சாலையோரத்தில் பட்டுப்போன ஒரு பெரிய பலாமரம் உயர் அழுத்த மின்கம்பியின் மீது முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் மரம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த மரத்தை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண் குமாரதாஸ், ராணித்தோட்டம்.