ஆடுகளை கடிக்கும் தெரு நாய்கள்

Update: 2025-10-05 09:42 GMT

அரியலூர் மாவட்டம், ராயம்புரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட காவேரிப்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஆடுகளை இப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கடித்துக் குதறி வருகிறது. இதனால் ஆடுகள் உயிரிழந்து விடுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்