ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட வில்லரசம்பட்டி சாணார்பாளையம் தெருவில் உள்ள கீழ்பவானி ஓடையை அதிகளவில் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த இடத்தில் தண்ணீர் செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளது. பாம்புகள் ேபான்ற விஷஜந்துகள் தங்க வசதியான இடமாகவும் மாறியுள்ளது. இதன் காரணமாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே செடி, கொடியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?