அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்மான்கொண்டான் பகுதியில் விவசாயிகள் மின்மோட்டார் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள விவசாய மின்மோட்டார்களில் இருந்து மின் ஒயர்களை மர்மநபர்கள் திருடி செல்கின்றனர். இந்த திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.