உத்தமபாளையம் நகரில் வாரம் ஒருமுறை காய்கறி சந்தை நடைபெறுகிறது. இங்கு விற்பனை ஆகும் பொருட்களை ஒரு சில வியாபாரிகள் சில்லரை கடை விற்பனை விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். ஒரே சீரான விலையை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.