தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-15 14:01 GMT

மாரண்டஅள்ளி வெள்ளி சந்தை சாலையில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களை தெருநாய்கள் பின் தொடர்ந்து துரத்தி செல்கின்றன. இதனால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனாலேயே பொதுமக்கள் இந்த சாலையை கடந்து செல்லும் போது மிகவும் அச்சப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலர்கள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்